கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர் | ஐ‌சி‌சி 2009
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » ஆமதாபாத் டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது: சச்சின் 43வது சதம்
Feedback Print Bookmark and Share
 
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இருதரப்பிற்கும் வெற்றி-தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. 2வது இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கர் தனது 43வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

PTI Photo
FILE
ஆமதாபாத்தில் நடந்த இப்போட்டியின் கடைசி நாளான இன்று தனது 2வது இன்னிங்சைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 412 ரன்கள் எடுத்திருந்த போது, இரு தரப்பினரும் போட்டியை ‘டிர’ செய்வதாக ஒப்புக்கொண்டனர்.

முன்னதாக கடைசி 15 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், களத்தில் இருந்த சச்சின்-லஷ்மண் இணையிடம் சங்கக்காரா போட்டியை முடித்துக் கொள்ளலாமா? எனக் கேட்டார். அதற்கு போட்டியைத் தொடர்வதாக இருவரும் பதில் அளித்ததைத் தொடர்ந்து மீண்டும் போட்டி நடந்தது. அப்போது சச்சின் 87 ரன்களில் இருந்தார்.

இதன் பின்னர் தொடர்ந்து விளையாடிய சச்சின், இன்னிங்சின் 128வது ஓவரில் தனது சதத்தை நிறைவு செய்தார். லஷ்மண் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் பின்னர் போட்டியை நிறைவு செய்வதாக லஷ்மண்-சச்சின் இணை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து போட்டி ‘டிர’வில் முடிந்தது.

இலங்கைத் தரப்பில் ஹெராத் 2 விக்கெட்டுகளும், மேத்யூஸ், வலகேதரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். முதல் இன்னிங்சில் 275 ரன்கள் குவித்த இலங்கை வீரர் ஜெயவர்த்தனேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

மொத்தம் 3 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின், 2வது போட்டி கான்பூரில் வரும் 24ஆம் தேதி துவங்குகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்