கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர் | ஐ‌சி‌சி 2009
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » கம்பீர் 114 ரன்னில் அவுட்: இந்தியா-294/4
Feedback Print Bookmark and Share
 
இலங்கைக்கு எதிராக ஆமதாபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க வீரர் கௌதம் கம்பீர் 114 ரன்களில் ஆட்டமிழந்தார்.

போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணி தனது 2வது இன்னிங்சைத் தொடர்ந்து வருகிறது. உணவு இடைவேளையின் போது 3 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களை எடுத்திருந்த இந்திய அணி, ஸ்கோர் 275 ஆக இருந்த போது கம்பீர் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து சச்சினுடன் லஷ்மண் இணைந்தார்.

இன்னிங்சின் 90வது ஓவரில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் 41 ரன்கள், லஷ்மண் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இலங்கைத் தரப்பில் ஹெராத் 2 விக்கெட்டுகளும், வலகேதரா, மேத்யூஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்