இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 3-2 என்ற வெற்றிக் கணக்கில் முன்னிலை உள்ள தங்கள் அணி நாளைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றுவிட வேண்டும் என்ற உறுதியுடன் விளையாடுவோம் என்று ஆஸ்ட்ரேலிய அணியின் துணைத் தலைவர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.
இந்திய, ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையிலான 6வது ஒரு நாள் போட்டி நாளை அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
நாளை காலை துவங்கும் இப்போட்டி இரு அணிகளுக்கும் இடையிலான கடும் போட்டியாக இருக்கும் என்று கூறியுள்ள ஹஸ்ஸி, மும்பையில் நடைபெறவுள்ள கடைசிப் போட்டிக்கு காத்திராமல் இந்தப் போட்டியிலேயே வெற்றி பெற்று தொடரை வென்றுவிடும் உறுதியுடன் விளையாடுவோம் என்று கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த 5வது ஒரு நாள் போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலியா வெற்றி பெற்று 3-2 என்ற வெற்றிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது.