பிரென்டன் டெய்லர் சதம்: வங்கதேசத்திற்கு 222 ரன்கள் இலக்கு
சிட்டகாங், வியாழன், 5 நவம்பர் 2009( 13:38 IST )
வங்கதேசத்திற்கு எதிரான 5வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் பிரென்டன் டெய்லர் சதம் அடித்துள்ளார்.
இத்தொடரில் இதுவரை 3 போட்டிகளில் வெற்றி பெற்று, 3-1 என்ற போட்டிக் கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ள வங்கதேச அணி, இன்றைய 5வது போட்டியில் பூவா-தலையா வென்று பந்து வீசியது.
ஜிம்பாப்வே துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய பிரென்டன் டெய்லர் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். எனினும் மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. டெய்லர் 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.