ரஞ்சி டிராபி சூப்பர் லீக் பிரிவு ஏ 4 நாள் கிரிக்கெட் போட்டியில் ரயில்வே அணியை 327 ரன்களுக்கு சுருட்டிய தமிழ் நாடு அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் தன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லியில் நடைபெறும் இந் ரஞ்சி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் முரளி விஜய் 65 ரன்களுடனும், எஸ்.பத்ரிநாத் 33 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
முன்னதாக இரண்டாம் நாளான இன்று 242/4 என்று துவங்கிய ரயில்வே அணி அடுத்த 6 விக்கெட்டுகளை 85 ரன்களுக்கு இழந்தது. ரயில்வே அணியின் துவக்க வீரர் சஞ்சய் பாங்கர் 111 ரன்களில் துவங்கி 163 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தமிழக அணியில் பாலாஜி, ஜெசுராஜிற்கு விக்கெட்டுகள் இல்லை. அபினவ் முகுந்த், அஷ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பேட்டிங்கில் அபினவ் முகுந்த் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். ஏ.பி. கார்த்திக் 47 ரன்கள் எடுத்து முரளி கார்த்திக் பந்தில் ஆட்டமிழந்தார்.