ஜிம்பாப்வேயிற்கு எதிராக டாக்காவில் நேற்று நடைபெற்ற முதல் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணித் தலைவர் ஷாகிப் அல் ஹஸன் 69 பந்துகளில் 105 ரன்களை விளாசியதா. ஜிம்பாப்வே நிர்ணயித்த 220 ரன்கள் இலக்கை வங்கதேசம் 29.3 ஓவர்களில் எடுத்து முடித்தது.
தமீம் இக்பாலும், ஜுனைத் சித்திக்கும் அதிரடி வேகத்துடன் துவங்கினர். தமீம் கைல் ஜார்விஸை இரண்டு அபாரமான மிட் விக்கெட் பவுண்டரிகளை அடிக்க, எல்டொன் சிகும்பராவின் முதல் பந்தும், கடைசி பந்தும் சிக்சருக்கு பறந்தது.
அதற்கு அடுத்த கைல் ஜார்விஸ் ஓவரில் ஜுனைத் சித்திக் 4 பவுண்டரிகளை விளாசினார். 3 ஓவர்களில் 43 ரன்கள் என்று கதிகலங்கடித்துக் கொண்டிருந்தபோது, ஜுனைத் சித்திக் 12 பந்துகளில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து ச்கும்பரா பந்தில் ஆட்டமிழந்தார்.
சிகும்பராவின் அடுத்த ஓவரில் அஷ்ரஃபுல் 3 ரன்களுக்கு வெளியேறினார். சாமு சிபாபா அடுத்த ஓவரில் 26 ரன்கள் எடுத்த தமீம் விக்கெட்டை வீழ்த்தினார். ஜிம்பாப்வே 56/3 என்று ஆனது.
10 ஓவர்களுக்கு பிறகு பேட்டிங் பவர் பிளேயை எடுத்தார் ஷாகிப் அல் ஹஸன், உடனேயே ஜார்விஸின் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் விளாசினார்.
சுழற்பந்து வீச்சாளர் கிரீமரை கொண்டு வந்த போது ஷாகிப் அல் ஹஸன் அனாயாச மட்டை சுழற்றலில் இறங்கினார். 3 பவுண்டரிகளை விளாசினார். இந்த நேரத்திலிருந்து ஷாகிப் ஹஸனை கட்டுப்படுத்த முடியவில்லை.
ரே பிரைஸ் என்ற சிக்க்ன சுழற்பந்து வீச்சாளரையும் ஷாகிப் விட்டு வைக்கவில்லை. அவர் ஓவரில் லாங் ஆனில் ஒரு சிக்சரையும், 2 பவுண்டரிகளையும் விளாசினார் ஷாகிப்.
மறு முனையில் ராகிபுல் நிதானமாக விளையிஆடினார். சிபாபாவின் 7-வது ஓவரில் 16 ரன்கள் எடுக்கப்பட்ட போது ஷாகிப் 94 ரன்களை எட்டினார். வங்கதேசத்திற்கு தேவை 12 ரன்கள். ஆனால் இரண்டு பவுண்டரிகளை அடித்து ஷாகிப் சதத்தை கடந்தார். இது அவரது 4-வது ஒரு நாள் கிரிக்கெட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகனாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரசாக் தேர்வு செய்யப்பட்டார்.