கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர் | ஐ‌சி‌சி 2009
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » ஜிம்பாப்வே 219 ரன்களுக்கு சுருண்டது
Feedback Print Bookmark and Share
 
டாக்காவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வரும் வங்கதேச-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 47.2 ஓவர்களில் 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலக்கை துரத்தும் வங்கதேசம் 9வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் மஸகாட்சா முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். அவர் 31 பந்துகளில் 5 பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் அடித்து சிபாபாவுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 59 ரன்களை சேர்த்தார்.

ஆனால் அதன் பிறகு ரசாக், அஷ்ரஃபுல் பந்துகளில் விக்கெட்டுகளை தொடர்ச்சியான இடைவெளியில் இழந்த ஜிம்பாப்வே 31-வது ஓவரில் 130/5 என்று திணறியது.

அதன் பிறகு தைபூ (38), வாலர் (40) ஆகியோர் இணைந்து ஸ்கோரை 184 ரன்களுக்கு உயர்த்தினர். இறுதியில் 219 ரன்களுக்கு ஜிம்பாப்வே சுருண்டது.

அப்துர் ரசாக் 9.2 ஓவர்களில் 29 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்