கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர் | ஐ‌சி‌சி 2009
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » சுழற்பந்து வீச்சு - ஷேன் வார்ன் எச்சரிக்கை
Feedback Print Bookmark and Share
 
உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்ன், சுழற்பந்து வீச்சு என்ற கலையை பயிற்சியாளர்களும், அணித் தலைவர்களும் புரிந்து கொள்ளவில்லை எனில் அந்தக் கலை விரைவில் அழிந்து விடும் என்று எச்சரித்துள்ளார்.

அடிலெய்டில் அவர் இது குறித்து அவர் நீண்ட உரையாற்றியுள்ளார். சுழற்பந்து வீச்சிற்கு சரியான கள வியூகம் அமைத்து கொடுக்கும் திறமையின்மை, ரன் இல்லாத பந்தை வீசியாகவேண்டும் என்பதன் மீது அணித்தலைவர்களுக்கு இருக்கும் பீடிப்பு ஆகியவை இந்தக் கலையை எதிர் நோக்கும் அச்சுறுத்தலாகும் என்று கூறியுள்ளார்.

இதனால் அடுத்த தலை முறை சுழ்ற்பந்து வீச்சாளர்களை சுழற் பந்து வீச்சு என்பது ஒரு ஆயுதம் என்று கூறி வளர்த்தெடுக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

"தற்போது ஆஸ்ட்ரேலியாவில் உள் நாட்டு கிரிக்கெட் மட்டத்தில் சுழற்பந்து வீச்சிற்கு நல்ல ஃபீல்டிங் அமைத்துக் கொடுத்து அதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் கேப்டன்கள் இல்லை என்பதுதான் தற்போது ஆஸ்ட்ரேலியாவில் உள்ள பிரச்சனை.

இதனால் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக பொறுப்பேற்றுள்ள நான் அனைத்து மா நில கிரிக்கெட் அணி கேப்டன்களையும் சந்தித்து சுழற்பந்து வீச்சிற்கு களம் அமைப்பது குறித்து விவாதிக்கப் போகிறேன்.

"எங்களிடம் சில நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் சிக்கனமாக வீசுவது என்பது தற்போது அதிக கவனம் பெறுகிறது. 20 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர் வீசினால் 50 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால் என்னைக்கேட்டால் 100 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதுதான் சிறந்தது என்று கருதுகிறேன்.

எனவே தற்போது ஸ்பின்னர் ரன்கள் கொடுக்கக்கூடாது என்று கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் விக்கெட் எடுக்கும் ஸ்பின்னர்களாக யாரும் உருவாவதில்லை.

கடந்த சில மாதங்களாக 4 அல்லது 5 சுழற்பந்து வீச்சாளர்களை ஆஸ்ட்ரேலிய தேர்வு குழுவினர் அணியில் தேர்வு செய்தனர். ஆனால் ஒருவர் கூட தங்களது திறமையை நிரூபிக்கவில்லை. இதனால் தேர்வாளர்களை குறைகூறிப் பயனில்லை.

தேர்வுக் குழுவிற்கு பாதுகாப்பான ஸ்பின்னர் தேவையா அல்லது எதிர்தாக்குதல் தொடுக்கும் ஸ்பின்னர் தேவையா என்பதில் குழப்பம் நிலவுகிறது.

இவ்வாறு கூறினார் ஷேன் வார்ன்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்