கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர் | ஐ‌சி‌சி 2009
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » ஷெப்பர்ட் மரணம் ஷேன் வார்ன் அஞ்சலி
Feedback Print Bookmark and Share
 
உலகின் தலை சிறந்த நடுவர்களில் ஒருவரான இங்கிலாந்தின் டேவிட் ஷெப்பர்ட் புற்று நோயால் காலமானதை தொடர்ந்து ஆஸ்ட்ரேலிய சுழற்பந்து மேதை ஷேன் வார்ன் அவர் ஒரு மிகச்சிறந்த நடுவர் என்று புகழாரம் சூட்டினார்.

"அவர் நடுவர் பொறுப்பாற்றும் விதம் ஒரு தனி அழகுதான். 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு அவருடன் ஒரு மது பான விடுதியில் 4 மணி நேரம் உடன் அமர்ந்து மது அருந்தியது இன்னமும் என் நெஞ்சில் பதிந்துள்ளது. அவர் சிறந்த நடுவர் மட்டுமல்லாது நல்ல மனிதரும் கூட, நட்பிலும் சிறந்தவர்" என்று கூறியுள்ளார் ஷேன் வார்ன்.

மற்றொரு தலை சிறந்த நடுவரான சைமன் டாஃபல் தனது அஞ்சலியில் "நல்ல நடுவராக இருக்க வேண்டுமென்றால் ஒரு நல்ல மனிதனாக இருக்கவேண்டும் என்ற பாடத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது அவர்தான்" என்று கூறினார்.

அவர் மரணத்தையொட்டி லார்ட்ஸ் மைதானத்தில் எம்.சி.சி. கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்