நாக்பூரில் நேற்று ஆஸ்ட்ரேலியாவை இந்தியா வீழ்த்தியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணித் தேர்வுக் குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்கும் இதே அணி தொடரும் என்று கூறியுள்ளார்.
"அணியின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது, அனைவரும் சிறப்பாக செயல் பட்டனர். மகேந்திர சிங் தோனி தன் பழைய அதிரடி முறையில் விளையாடியது வரவேற்கத்தக்கது. கம்பீர், சேவாக் மற்ற வீரர்கள் என்று அனைவரும் தன் பங்கை சிறப்பாகச் செய்தனர்"
ஆஸ்ட்ரேலியா போன்ற பலமான அணியை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல" என்று பாராட்டியுள்ளார் ஸ்ரீகாந்த்.
3-வது ஒரு நாள் போட்டி டெல்லியில் நாளை மறு நாளும், 4-வது ஒரு நாள் போட்டி மொஹாலியில் நவம்பர் 2ஆம் தேதியும் நடைபெறுகிறது.