'நேர்மையற்ற தீர்ப்பை ஒரு நாளும் அளித்ததில்லை' என்று கூறிய உலகின் தலை சிறந்த கிரிக்கெட் நடுவராக கருதப்படும் இங்கிலாந்தின் டேவிட் ஷெப்பர்ட் நீண்ட கால புற்று நோயால் காலமானார் அவருக்கு வயது 68.
3 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி உட்பட 172 ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் 92 டெஸ்ட் போட்டிகளிலும் நடுவர் பொறுப்பாற்றிய டேவிட் ஷெப்பர்ட் கடந்த சில நாட்களாக புற்று நோயால் அவதியுற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை தோல்வியுற அவர் மரணமடைந்தார்.
ஜூன், 2005இல் அவர் பாகிஸ்தான், மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக நடுவராக இருந்தார். அந்த போட்டி முடிந்த பிறகு பிரைன் லாரா, ஷெப்பர்டின் சேவைகளை கவுரவிக்கும் விதமாக அவருடைய பேட்டை நினைவுச் சின்னமாக பரிசளித்தார்.
14 ஆண்டு காலம் டேவிட் ஷெப்பர்ட் குளொஸ்டர்ஷயர் அணிக்கு விளையாடி 12 சதஙளையும் எடுத்துள்ளார்.
இங்கிலாந்தின் முன்னாள் புகழ் பெற்ற நடுவர் டிக்கி பேர்டிற்கு பிறகு சிறந்த நடுவர் என்று கிரிக்கெட் ரசிகர்களிடமு, உலக அளவில் கிரிக்கெட் அணி மற்றும் வீரர்களிடமும் சிறந்த நட்வர் என்றும் பெயர் பெற்றார் டேவிட் ஷெப்பர்ட்.
இவருடன் நிறைய போட்டிகளில் இணைந்து பணியாற்றிய இவரது நண்பர் டிக்கி பேர்ட், டேவிட் ஷெப்பர்ட் உலகை விட்டு பிரிந்தது தன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சோகமான விஷயமாகும் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.