தென் ஆப்பிரிக்காவிற்கு செல்லும் இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்படாவிட்டாலும், தான் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் தெரிவித்துள்ளார்.
தற்போது துர்ஹாம் அணிக்காக இவர் 4 ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
"இங்கிலாந்திற்கு விளையாட நான் எப்போதும் விரும்புகிறேன், ஆனால் அவர்கள் தற்போது எதிர்காலத்தை மனதில் கொண்டுள்ளனர். 60க்கும் மேற்பட்ட டெஸ்ட்களில் தற்போது 226 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன்." என்றார் ஸ்டீவ் ஹார்மிசன்.
மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம்பெற பாடுபடுவேன், என்கிறார் ஹார்மிசன்.