கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர்
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » முத்தரப்பு ஒருநாள் தொடர்: துவக்க வீரர் தினேஷ் கார்த்திக்
 
இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று நடைபெற உள்ள இந்தியா-நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் துவக்க வீரராக தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் எனத் தெரிகிறது.

முத்தரப்பு தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த துவக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர், வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய திரும்பியுள்ளார். அவர் 10 நாட்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கௌதம் கம்பீர் நாடு திரும்பியதால், சச்சின் டெண்டுல்கருடன் துவக்க வீரராக தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் எனத் தெரிகிறது. இதுகுறித்து தோனி அளித்துள்ள பேட்டியில், “பகலிரவு ஆட்டமாக இருப்பதால், முதல் விக்கெட்டுக்கு திராவிட் களமிறங்குவதே சரியாக இருக்கும்.

எனினும், ரெய்னா, யுவராஜ் மட்டுமின்றி நானும் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய அனுபவம் உள்ளதால் அந்த இடத்தில் விளையாடுவதில் யாருக்கும் சிக்கல் இல்லை.

ஆனால், கம்பீர் இல்லாததால் அவரது இடத்தில் தினேஷ் கார்த்திக் துவக்க வீரராக களமிறங்குவார். வலைப்பயிற்சியின் போது தினேஷ் கார்த்திக்கின் செயல்பாடு சிறப்பாக இருந்தது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளத” என்றார்.

இந்திய அணி: தோனி, யுவராஜ், சச்சின், திராவிட், ஹர்பஜன், விராட் கோஹ்லி, பிரவீன் குமார், ஆஷிஸ் மிஸ்ரா, ஏ.எம்.நாயர், ஆஷிஸ் நெஹ்ரா, யூசுப் பத்தான், சுரேஷ் ரெய்னா, இஷாந்த் ஷர்மா, ஆர்.பி.சிங்.

நியூஸீலாந்து அணி: வெட்டோரி, ஷேன் பாண்ட், புரூம், பட்லர், டையமன்டி, எல்லியாட், குப்டில், ஹாப்கின்ஸ், மெக்குல்லம், நாதன் மெக்குல்லம், கைல் மில்ஸ், ஜேக்கப் ஓரம், ஜீத்தன் படேல், ஜெஸ்ஸி ரைடர், ரோஸ் டெய்லர், டேரல் டஃபி.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்