கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர்
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » கவாஸ்கரும், ரிச்சர்ட்சும் எனது இரண்டு ஆளுமைகள் (I want to blend Gavaskar's defense and Viv Richards' aggression-Sachin)
 
webdunia photo
FILE
சுனில் கவாஸ்கரின் சிறந்த தடுப்பாட்ட உத்தியையும், மேற்கிந்திய மேதை விவியன் ரிச்சர்ட்ஸின் ஆக்ரோஷ உத்தி இரண்டையும் கலந்து எனக்கேன்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டேன் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

சுனில் கவாஸ்கர், இவரைப்பற்றி சொல்லத் தேவையில்லை, விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் எனது ஆட்டத்தின் மீது அதிக தாக்கம் செலுத்தியவர்கள்" என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

"சுனில் கவாஸ்கர் உறுதியான தடுப்பாட்ட வீரனாகவும் அதே சமயம் விவியன் ரிச்சர்ட்ஸ் போல் அதிரடி ஆட்ட உத்தியை கடைபிடிக்கும் வீரனாகவும் என்னை உருவாக்கிக் கொண்டேன். ஏனெனில் இந்த இரண்டு உத்திகளின் சேர்க்கை அபாயகரமானது. இந்த இருவராலும் நான் தாக்கம் பெற்றேன் என்றால் அது மிகையாகாது" என்றார் சச்சின்.

அதே போல் தன்னை ஊக்குவிக்க அடுத்த நபர் தேவையில்லை, அதே போல் ஒரு பெரிய போட்டிக்கு தன்னைத்தானே தயார் செய்து கொள்ளும் அளவிற்கு தன்னிடம் இன்னமும் ஊக்கம் இருக்கிறது என்று கூறினார் சச்சின்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்