ஆஸ்ட்ரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் காயமடைந்துள்ளதையடுத்து அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடம் வோஜஸ் என்பவரை ஆஸ்ட்ரேலிய அணி சேர்த்துள்ளது.
ஏற்கனவே டாஸ்மேனியாவைச் சேர்ந்த விக்கெட் கீபர் டிம் பெய்ன் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும் ஒரு பேட்ஸ்மெனை கூடுதலாக சேர்க்க ஆஸ்ட்ரேலியா முடிவு செய்தது.
கடந்த வாரம் டிம் பெய்ன் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக தன் முதல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடினார்.
இவர் ஒரு துவக்க ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.