கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர்
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » இங்கிலாந்து ஒப்பந்தத்தை பனேசர் இழக்கலாம் (Panesar may loose the central contract of ECB)
 
webdunia photo
FILE
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் இடம்பேறாமல் போகலாம் என்று இங்கிலாந்து செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரியான் சைட்பாட்டம், ஹாரிமிசன், இயன் பெல் உட்பட தற்போது மைய வீரர்கள் ஒப்பந்தத்தில் உள்ள 6 வீரர்கள் தங்கள் ஒப்பந்தங்களை இழக்கலாம் என்று தெரிகிறது.

சமீப காலமாக விக்கெட்டுகளை வீழ்த்த திணறி வரும் மான்டி பனேசர் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்டிற்கு பிறகு அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்த ஆஷஸ் தொடரில் நாயகர்களாக எழுச்சியுற்ற ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், ஸ்டூவர்ட் பிராட் உட்பட குக், பீட்டர்சன், ஆண்டர்சன் ஆகியோரது தர நிலைகள் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட் பிரையர், கிரகாம் ஸ்வான் மைய ஒப்பந்தத்தில் முழு நேர வீரர்களாக சேர்க்கப்படவுள்ளனர்.

இங்கிலாந்தின் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியல் இன்னும் இரு வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்