கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர்
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » சிறந்த ஒரு தின கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்- ஹேட்லி (Sachin is the all time best ODI Batsmen-Hadlee)
 
webdunia photo
FILE
அனைத்து காலத்திற்குமான தலை சிறந்த ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் தன்னைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர்தான் என்று நியூஸீலாந்து முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டர் சர் ரிச்சர்ட் ஹேட்லி தெரிவித்துள்ளார்.

"என்னைப் போறுத்தவரை இரண்டு பேட்ஸ்மென்கள் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலை சிறந்தவர்கள் என்றால் அது விவ் ரிச்சர்ட்சும், சச்சின் டெண்டுல்கரும்தான். மேலும் சில சிறந்த வீரரகள் உள்ளனர். ஆனால் ரிச்சர்ட்ஸ், சச்சின் ஆகியொரது ஆட்டம் தனிச்சிறப்பு வாய்ந்தது.

இந்த இரு வீரர்களும் அவர்கள் காலத்தின் தலை சிறந்த வீரர்கள். எதிரணியினர் இலக்கு வைத்து வீழ்த்தத் துடிக்கும் பேட்ஸ்மென்கள் இருவரும். இவர்கள் இருவரும் எந்த ஒரு பந்து வீச்சையும் ஆதிக்கம் செலுத்தி அணிக்குக் வெற்றி தேடித் தருபவர்கள்.

சாதனைகள் எப்போதும் இதனை நமக்கு அறிவிக்கும். அதன் படி நான் சச்சின் டெண்டுல்கரை அனைத்து காலத்திற்குமான சிறந்த ஒரு நாள் கிரிகெட் வீரராக தேர்வு செய்கிறேன். மிகவும் அபூர்வமான வகையில் அவர் இத்தனை நீண்ட கால கிரிக்கெட் வாழ்வில் சீராக ரன்களை எடுத்து வந்துள்ளார். 17,000 ரன்கள் 44.00 சராசரி ஸ்ட்ரைக் ரேட் 86, 91 அரை சதங்கள் 43 சதங்கள்.

ஒவ்வொரு 3வது இன்னிங்ஸிலும் அவர் அரைசதமும் அதற்கு மேலும் எடுத்துள்ளார். ஒவ்வொரு 9-வது இன்னிங்ஸிலும் சதம் எடுத்துள்ளார். 154 விக்கெட்டுகளை வீழ்த்தி சில சமயங்களில் ஒரு பயனுள்ள பந்து வீச்சாளராகவும் இருந்துள்ளார்".

இவ்வாறு கூறியுள்ளார் ரிச்சர்ட் ஹேட்லி
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்