கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர்
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » மீண்டும் விளையாடுவது சந்தேகம்-பிளின்டாஃப் (I may not be able to play again- Flintoff)
 
webdunia photo
FILE
முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் உயர் மட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாமல் கூட போகலாம் என்று டெஸ்ட் போட்டியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் ஐயம் வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் உயர் மட்ட கிரிக்கெட்டிற்கு திரும்பும் எண்ணம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

"அறுவை சிகிச்சை நான் நினைத்த அளவிற்கு வெற்றிகரமாக அமையவில்லையெனில் நான் கிரிக்கெட் போட்டிகளையே விளையாட முடியாமல் போகலாம், ஆனால் இந்த அறுவை சிகிச்சை நன்றாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி சரியாக அமையவில்லையெனில் என்னால் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

தனது கிரிக்கெட் வாழ்வு இது போன்று முடிவடைவதில் தனக்கு ஒரு போதும் விருப்பமில்லை என்று கூறிய பிளின்டாஃப், பிப்ரவரி, 2010-இல் வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் பங்கேற்க பாடுபடுவதாக தெரிவித்தார் பிளின்டாஃப்.

"என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை ஆஷஸ் தொடரை வென்றதுடன் நிறைவடைந்தது. அதே போல் எனது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு 2011 உலகக் கோப்பையை வெல்வதுடன் நிறவடையலாம் என்று எதிர்பார்க்கிறேன்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்