முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > இலங்கை 292; பாகிஸ்தான் 15/2
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இலங்கை 292; பாகிஸ்தான் 15/2
கால்லே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இலங்கை தன் முதல் இன்னிங்சில் 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்கள் எடுத்துள்ளது.

யூனுஸ் கான் 7 ரன்களுடனும், இரவுக்காவலான இறக்கப்பட்ட ராஃப் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக புது முக வேகப்பந்து வீச்சாளர்களான மொகமட் ஆமிர், அப்துர் ராஃப், ஆகியோரிடம் முதல் வரிசை விக்கெட்டுகளை இழந்த இலங்கை அதன் பிறகு யூனிஸ் கான், சயீத் அஜ்மல் ஆகியோரிடம் பின் வர்சை வீரர்களை இழந்து 292 ரன்களுக்கு சுருண்டது.

தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் சல்மான் பட் விக்கெட்டை அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே இழந்தது. அவர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அது ஒரு அபாரமான ஸ்விங் பந்தாகும்.

பந்து ஆஃப் அன்ட் மிடில் ஸ்டம்புகள் லைன்களுக்கு இடையில் பிட்ச் ஆகி லேசாக வெளியே சென்றது போல் இருந்ததால் பட் அதனை விட்டு விட முயன்றார் ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்ப் மேல் முனையை தட்டியது.

4-வது ஓவரில் மற்றொரு துவக்க வீரர் குர்ரம் மன்சூர் 2 ரன்கள் எடுத்திருந்தபோது இடது கை வேகப்பந்து வீச்சாளர் துஷாராவிடம் எல்.பி.டபிள்யூ ஆனார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஓய்வு அறிவிப்பு; சமிந்தா வாஸ் மறுப்பு
இலங்கை விக்கெட்டுகள் சரிவு: 271/8
இலங்கை அணி 153/4
டெஸ்ட் போட்டிகளிலிருந்து வாஸ் ஓய்வு
கால்லே டெஸ்ட்: இலங்கை 77/2
தோனி ஆட்ட நாயகன்! இந்தியா அபார வெற்றி