முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > ஓய்வு அறிவிப்பு; சமிந்தா வாஸ் மறுப்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஓய்வு அறிவிப்பு; சமிந்தா வாஸ் மறுப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு பெறுவதாய் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஸந்தா டிமெல் அறிவித்ததையடுத்து, தான் ஓய்வு பற்றி எதுவும் முடிவெடுக்கவில்லை என்று மறுத்துக் கூறியுள்ளார்.

தான் இது குறித்து டிமெல்லிடமோ அல்லது வேறு ஒருவரிடமோ ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை என்று கூறியுள்ளார் சமிந்தா வாஸ்.

சமிந்தா வாஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, ஒரு நாள் மற்றும் 20- 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார் என்று தன்னிடம் கூறியதாக அஸந்தா டிமெல் கூறியிருந்தார்.

ஆனால் தான் அது போன்று எந்த முடிவுக்கும் வரவில்லை என்று தற்போது வாஸ் மறுத்திருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சமிந்தா வாஸ் 110 டெஸ்ட் போட்டிகளில் 354 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இலங்கை விக்கெட்டுகள் சரிவு: 271/8
இலங்கை அணி 153/4
டெஸ்ட் போட்டிகளிலிருந்து வாஸ் ஓய்வு
கால்லே டெஸ்ட்: இலங்கை 77/2
தோனி ஆட்ட நாயகன்! இந்தியா அபார வெற்றி
விக்டோரியா அணியில் முரளிதரன்?