கால்லே மைதானத்தில் நடைபெறும் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சற்று முன் வரை 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போது திலன் சமரவீரா 28 ரன்களுடனும், தில்ஷான் 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
முன்னதாக மொகமட் ஆமிர் 2 விக்கெட்டுகளை வீழ்த்த 21/2 என்று இருந்த இலங்கை அணியை பரனவிதனாவும், ஜெயவர்தனேயும் 96 ரன்களுக்கு உயர்த்தினர்.
பாகிஸ்தான் அணிக்கு இரண்டு புது முக வேகப்பந்து வீச்சாளர்கள் 4 விக்கெட்டுகளை இது வரை பெற்றுத் தந்துள்ளனர்.
அப்போது அப்துர் ராஃப் என்ற புதிய வேகப்பட்ன்கு வீச்சாளரை யூனுஸ் கான் பந்து வீச அழைத்தார். சற்றே கவனம் பிசக அவர் கம்ரன் அக்மலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜெயவர்தனே 30 ரனகள் எடுத்து அவுட்டானார்.
பரனவிதனாவிற்கு முதலில் யூனுஸ் கேட்ச் விட்டார். அதனை நன்றாக பயன்படுத்திக் கொண்ட அவர் 11 பவுண்டரிகளுடன் 72 ரன்களை எடுத்து ராஃப் பந்தில் மிஸ்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். |