இலங்கை அணியின் இடது கை ஸ்விங் பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓவ்யு பெற விரும்புவதாக இலங்கை அணியின் தலைமை தேர்வாளர் அஸந்தா டிமெல் தெரிவித்துள்ளார்.
35 வயதான சமிந்தா வாஸ் ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 20- 20 சர்வதேச பொட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெறுவார் என்று கூறியுள்ளார் டிமெல்.
அதாவது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட தனக்கு விருப்பமில்லை என்று தன்னிடம் ஊறியதாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அஸந்தா டிமெல் தெரிவித்துள்ளார்.
இது வரை 110 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள சமிந்தா வாஸ் இன்று துவங்கிய பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது கேப்டன் சங்கக்காரா, இங்கிலாந்தில் நடைபெற்ற 20- 20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பு சமிந்தா வாஸிடம் மேற்கொண்ட தனிப்பட்ட உரையாடலில் ஏதாவது ஒரு கிரிக்கெட்டை விட்டு விடவேன்டும் என்று வாஸிடம் தான் வலியுறுத்தியிருந்ததாக ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|