முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > கால்லே டெஸ்ட்: இலங்கை 77/2
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கால்லே டெஸ்ட்: இலங்கை 77/2
கால்லேயில் இன்று துவங்கிய இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பூவா தலையா வென்ற யூனிஸ் கான் முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தார். இலங்கை அணி சற்று முன் வரை 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தானின் புதிய வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஆமீர் முதல் ஓவரின் கடைசி பந்தில் துவக்க வீரர் வர்ணபுராவை அபாரமான ஷாட் பிட்ச் இந்ஸ்விங் பந்து மூலம் வீழ்த்தினார். கட் செய்ய முயன்ற வர்ணபுரா அதற்கான போதிய இடம் கிடைக்காமல் ஸ்டம்புகளில் வாங்கி விட்டுக் கொண்டார். அவர் எடுத்த ரன்கள் 2.

அதன் பிறகு 4-வது ஓவரில் புதிய வீரர் பரனவிதனாவையும் அவர் வீழ்த்தியிருப்பார் ஆனால் யூனுஸ் கான் 3-வது ஸ்லிப்பில் சுலப வாய்ப்பை நழுவ விட்டார்.

பிறகு சங்ககாரா 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மீண்டும் ஆமிர் ஒரு நல்ல ஆஃப் ஸ்டம்ப்பிற்கு வெளியே செல்லும் பந்தை வீச அதனை சங்கக்காரா அடித்து ஆடாமல் தொட்டு விட அது ஷோயப் மாலிக்கிடம் கேட்சாக அமைந்தது.

தற்போது கேட்ச் கோட்டை விடப்பட்ட பரனவிதனா 41 ரன்களுடனும், ஜெயவர்தனே 30 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

டேனிஷ் கனேரியாவை இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தேர்வு செய்யவில்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
தோனி ஆட்ட நாயகன்! இந்தியா அபார வெற்றி
விக்டோரியா அணியில் முரளிதரன்?
பாகிஸ்தான் கிரிக்கெட்டை தனிமை படுத்த முயற்சி-ஐ.சி.சி. மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
முரளிதரன் காயம் முதல் டெஸ்டில் இல்லை
தரவரிசை முதல் 10-இல் கம்பீர், ஹர்பஜன்
மொகமது ஆசிஃபிற்கு ரூ.10 லட்சம் அபராதம்