முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > பாகிஸ்தான் கிரிக்கெட்டை தனிமை படுத்த முயற்சி-ஐ.சி.சி. மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பாகிஸ்தான் கிரிக்கெட்டை தனிமை படுத்த முயற்சி-ஐ.சி.சி. மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
ஐ.சி.சி.-யின் எதிர்கால கிரிக்கெட் பயணத் திட்டத்தில் பாகிஸ்தான் அணியை தனிமைப் படுத்த முயற்சி நடப்பதாகவும் இந்தியா, ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய பணக்கார கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் நாடை புறக்கணிப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றமசாட்டியுள்ளது.

2012ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் தொடர்களை திட்டமிட்டு ஐ.சி.சி. பயணத் திட்ட விவரங்களை வெளியிடவிருந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்கள் பெரிய அளவில் இல்லை என்றும் குறிப்பாக பி.சி.சி.ஐ. தன் திட்டத்தில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர்கள் எதையும் குறிப்பிடவில்லை, இது கண்டனத்திற்குரியது என்றபாகிஸ்தான் கண்டனம் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த எதிர்கால பயணத்திட்ட வரைவை மாற்றவில்லையெனில் தாங்கள் கையெழுத்திட மாட்டோம் என்றும் அந்த கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.

ஐ.சி.சி.யின் பணக்கார கிரிக்கெட் வாரியங்களான இந்தியா, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகியவை கார்ப்பரேட் முறையில் கூட்டிணைந்து இந்த புறக்கணிப்பை செய்கின்றன என்றும் இந்த புறக்கணிப்பிற்கு பின்னால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கை இருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது.

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
முரளிதரன் காயம் முதல் டெஸ்டில் இல்லை
தரவரிசை முதல் 10-இல் கம்பீர், ஹர்பஜன்
மொகமது ஆசிஃபிற்கு ரூ.10 லட்சம் அபராதம்
ஆஸ்ட்ரேலியா 358; இங்கிலாந்து லயன் 302/6
அதிகரித்து வரும் ஐ.பி.எல். மோகம்; கவாஸ்கர் கவலை
பிரட் லீ-யை ஆதரிக்கிறார் கில்கிறிஸ்ட்