முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > தரவரிசை முதல் 10-இல் கம்பீர், ஹர்பஜன்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தரவரிசை முதல் 10-இல் கம்பீர், ஹர்பஜன்
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையில் கௌதம் கம்பீர் பேட்ஸ்மென் பிரிவில் 3-வது இடத்திலும், பந்து வீச்சு பிரிவில் ஹர்பஜன் சிங் 6-வது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களில் இந்த இரண்டு இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம் உள்ளது.

சச்சின் டெண்டுல்கர் 13-வது இடத்திலும், லக்ஷ்மண் 15-வது இடத்திலும், சேவாக் 20-வது இடத்திலும் உள்ளனர்.

அதே போல் பந்து வீச்சு தரவரிசைகளில் ஜாகீர் கான் 11-வது இடத்திலும் இஷாந்த் ஷர்மா 20-வது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் இந்தியா 117 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி தற்போது டெஸ்ட் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளது. நடைபெறவிருக்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கையை 1- 0 என்றோ 2- 1 என்ற கணக்கிலோ யூனுஸ் கான் தலைமை பாகிஸ்தான் தொடரை வென்றால் அந்த அணி இலங்கையை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறும்.

பேட்டிங் தரவரிசையில் யூனுஸ் கான் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மொகமது ஆசிஃபிற்கு ரூ.10 லட்சம் அபராதம்
ஆஸ்ட்ரேலியா 358; இங்கிலாந்து லயன் 302/6
அதிகரித்து வரும் ஐ.பி.எல். மோகம்; கவாஸ்கர் கவலை
பிரட் லீ-யை ஆதரிக்கிறார் கில்கிறிஸ்ட்
டாஸ்மேனியா அணியில் லஷித் மலிங்கா
2005ஆம் ஆண்டு ஆஷஸ் தோல்விக்கு புக்கானனே காரணம் - மார்டின்