போதை மருந்து வைத்திருந்ததற்காக துபாயில் 19 நாட்கள் பிடித்து வைக்கப்பட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆசிஃபிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதனால் இவர் ஐ.சி.சி. சாம்பியன் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட பரிசீலிக்கப்படுவார் என்று தெரிகிறது.
0.23 கிராம் 'ஹாஷிஷ்' என்ற போதை மருந்தை வைத்திருந்ததற்காக 19 நாட்கள் அளவில் துபாய் விமான நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார் மொகமது ஆசிப். இந்த விவகாரத்தின் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கௌரவத்தை குலைத்து விட்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் இவர் தற்போது ஊக்க மருந்து எடுத்து கொண்ட விவகாரத்தில் ஒராண்டு தடை அனுபவித்து வருவதால் இந்த தடை நீங்கியதும் அவர் பாகிஸ்தான் அணியில் விளையாட பரிசீலிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இதனை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட 3 நபர் குழு விசாரணை அறிக்கையில் அபராதம் விதிக்க பரிந்துரை செய்திருந்தது. |