முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > ஆஸ்ட்ரேலியா 358; இங்கிலாந்து லயன் 302/6
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆஸ்ட்ரேலியா 358; இங்கிலாந்து லயன் 302/6
வொர்ஸ்டரில் நடைபெற்று வரும் 4 நாள் பயிற்சி ஆட்டத்தின் 2ஆம் நாளில் ஆஸ்ட்ரேலியா தன் முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து லயன் அணி பிரட் லீயின் அபார பந்து வீச்சிற்கு 6 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்ந்து மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசிய பிரட் லீ பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். இதனால் துவக்க வீரர்களின் அபாரமான 172 ரன்கள் பார்ட்னர்ஷிப்பிற்கு பிறகு பிரட் லீ வீழ்த்திய 5 மளமள விக்கெட்டுகளால் 209/5 என்ற நிலைக்கு சரிந்தது.

இங்கிலாந்து லயன் துவக்க வீரர் டென்ல்ய் 66 ரன்களில் பிரட் லீயின் ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஸ்டம்ப்களை இழந்தார். அடுத்ததாக இயன் பெல் எதிர்கொண்டார். ஆனால் இவருக்கும் கால்களை காலணியோடு சேர்த்து பதம் பார்க்கும் 90 மைல் வேக ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கரை வீசினார் லீ இதனால் 0-இல் பெல் எல்.பி.டபிள்யூ ஆனார். ஹேட்ரிக் நிலையில் இருந்த பிரட் லீ வீசிய அடுத்த பந்தை விக்ரோம் சோலங்கி அதிர்ஷ்டவசமாக உள்புற விளிம்பில் ஆடினார்.

ஆனால் மீண்டும் ஒரு ரிவர்ஸ் ஸ்விங் பந்திற்கு சோலன்க்கி 8 ரன்களில் பவுல்டு ஆனார். 120 ரன்களை எடுத்த துவக்க வீரர் எஸ்.சி.மோர் பிரட் லீயின் பவுன்சரை ஹுக் செய்ய முயன்று தோல்வி தழுவினார். கடைசியாக இடது கை வீரர் மோர்கனை எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தி பிரட் லீ தன் கடைசி 40 பந்துகளில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

அதன் பிறகு டேவிஸ், ரஷித் ஆகியோர் ஸ்கோரை 302 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். தற்போது ரஷித் 36 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். டேவிஸ் 53 ரன்கள் எடுத்து நார்த் வீசிய மோசமான பந்திற்கு விக்கெட்டைக் கொடுத்தார்.

மிட்செல் ஜான்சன் பந்து வீச்சும், நேதன் ஹாரிட்ஸ் பந்து வீச்சும் கேப்டன் பாண்டிங்கிற்கு நிச்சயம் கவலை அளித்திருக்கும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
அதிகரித்து வரும் ஐ.பி.எல். மோகம்; கவாஸ்கர் கவலை
பிரட் லீ-யை ஆதரிக்கிறார் கில்கிறிஸ்ட்
டாஸ்மேனியா அணியில் லஷித் மலிங்கா
2005ஆம் ஆண்டு ஆஷஸ் தோல்விக்கு புக்கானனே காரணம் - மார்டின்
ராஜஸ்தான் ராயல்ஸில் ஜுஞ்ஜுன்வாலா
ஹஸ்ஸி 143; ஆஸ்ட்ரேலியா 337/8