போட்டி அமைப்பான இந்தியன் கிரிக்கெட் லீகிலிருந்து விலகிய வங்காள மாநில கிரிக்கெட் வீரர் ஜுஞ்ஜுன்வாலா, ஐ.பி.எல். கிரிக்கெட் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடலாம் என்று தெரிகிறது.
மிடில்செக்ஸ் அணிக்கு எதிரான காட்சிப் போட்டி ஒன்றில் விளையாட ஜுஞ்ஜுன் வாலா அழைக்கப்பட்டதாகவும், இதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவர் நிரந்தர இடம்பிடிக்கலாம் என்றும் தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய மன்னிப்பு அளிக்கும் திட்டத்தின்படி ஐ.சி.எல். கிரிக்கெட்டிலிருந்து வெளியேறிய 79 வீரர்களில் ஜுஞ்ஜுன்வாலாவும் ஒருவர்.
26 வயதான இந்த வங்காள வீரர் 15 முதல் தரப்போட்டிகளில் விளையாடி 3 சதம், 3 அரைசதங்களுடன் 879 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|