வொர்ஸ்டர்ஷயர் மைதானத்தில் ஆஸ்ட்ரேலியாவிற்கும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையே நேற்று துவங்கிய 4 நாள் பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலியா தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது.
7 முதல் வரிசை பேட்ஸ்மென்களில் 5 பேட்ஸ்மென்கள் 20 ரன்களையே எடுத்தனர். சைமன் கேடிச் 95 ரன்களையும், மைக் ஹஸ்ஸி 143 ரன்களையும் எடுத்து அணியை மீட்டனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹியூஸ் 7 ரன்கள், பாண்டிங் 1 ரன், கிளார்க் 4, நார்த் 1, ஹேடின் 7 என்று முன்னணி வீரர்கள் சொதப்ப, மிட்செல் ஜான்சன் 47 ரன்களை விளாசினார்.
இங்கிலாந்து லயன்ஸ் அணியில் ஹார்மிசனும், டிம் பிரேஸ்னனும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற கிராகாம் ஆனியன்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இது வரை இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் ஆஸ்ட்ரேலிய அணியின் முதல் வரிசை வீரர்கள் ஒரு நம்பிக்கை தரும் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |