சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமியில் பயிற்சி பெற்ற ராகுல் ஷுக்லா, நிசார் நியாஸ் என்ற இரண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்ட்ரேலியன் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் அணிக்காக வளர்ந்து வரும் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு ஆஸ்ட்ரேலியா செல்கின்றனர்.
எம்.ஆர்.எஃப். வேகப்பந்து ஆகடமியும் ஆஸ்ட்ரேலிய தலை நகர் கான்பெராவில் உள்ள ஆஸ்ட்ரேலியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் அமைப்பும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர்கள் இந்த அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தொடருக்கான இந்திய உள் நாட்டு அணி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்த தொடர் இரண்டு 20- 20 கிரிக்கெட் போட்டிகளுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் நடைபெறும்.
தென் ஆப்பிரிக்கா, நியூஸீலாந்து உள்ல் நாட்டு அணிகளும் இந்த வளர்ந்து வரும் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.
இந்த தொடரை 2005ஆம் ஆண்டு கர்னடகா மா நில கிரிக்கெட் அணி வென்றது. 2006, 07 ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்க அணியும், கடந்த ஆண்டு நியூஸீலாந்து அணியும் இந்த தொடரை வென்றுள்ளது.
17 வீரர்கள் கொண்ட ஏ.ஐ.எஸ்.(ஆஸ்ட்ரேலியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்பொர்ட்ஸ்) அணிக்கு கிரெக் சாப்பல் வழிகாட்டியாக செயல்படுவார். |