முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > ரிவர்ஸ் ஸ்விங்' ஜாக்கிரதை - பீட்டர்சன் எச்சரிக்கை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ரிவர்ஸ் ஸ்விங்' ஜாக்கிரதை - பீட்டர்சன் எச்சரிக்கை
2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஆஸ்ட்ரேலிய அணியை திக்குமுக்காடச் செய்த ரிவர்ஸ் ஸிவ்ங் பந்துவீச்சை இந்த ஆஷஸ் தொடரிலும் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் எதிர்கொள்ளவேண்டி வரும் என்று இங்கிலாந்து பேட்ஸ்மென் கெவின் பீட்டர்சன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

எட்ஜ்பாஸ்டனில் நேற்று இவர் இடு குறித்து கூறுகையில், "ஜிம்ம்ய் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஆண்ட்ரூ பிளின்டாஃப் ஆகிய 3 பந்து வீச்சாளர்களும் தற்போது வீசி வரும் முறையைப் பார்க்கும்போது, நான் அவர்களை எதிர்கொள்ள விரும்பமாட்டேன் என்றே கருதுகிறேன்.

வானிலை இதே போல் இருந்தால் பந்துகள் நிச்சயம் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும், இதனை ஆஸ்ட்ரேலியர்கள் எதிர்கொள்ள திணறவேண்டி வரும். ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மென்கள் ரிவர்ஸ் ஸ்விங்கை எதிர்கொள்ளவேண்டுமென்றால் உணமியில் நல்ல பேட்டிங் திறனை வெளிப்படுத்தவேண்டும், அவர்கள் பேட்டிங்கை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

மேற்கிந்திய அணிக்கு எதிராக ஆண்டர்சன் 90 மைல்களுக்கு பந்து வீசி இரு புறமும் ஸ்விங் செய்ததை பார்த்தால், 'எப்படி அவர் பந்துகளை எதிர்கொள்ளப் போகிறீர்கள்' என்று கேட்கத் தோன்றுகிறது.

என்று கூறியுள்ளார் பீட்டர்சன். ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பு மேற்கிந்திய தீவுகளில் பலவீனமான மேற்கிந்திய அணிக்கு எதிராக இவர்கள் வீசியதை வைத்துக் கொண்டு பீட்டர்சன் இவ்வாறு அவதானிக்கிறார்.

ஆனால் ஆஸ்ட்ரேலியர்கள் ஆன்டர்சன் பந்து வீச்சை அவ்வளவு சிறப்பானதாக கருதுவதில்லை. அவர் நெருக்கடி கொடுத்தால் பசுவாகிவிடுவார் என்பதே ஆஸ்ட்ரேலியர்களின் கருத்து.

கடந்த ஆஷஸ் தொடர் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற போது ஆண்டர்சன் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 83 ரன்கள் என்ற சராசரி விகிதக்தில் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார், என்று பீட்டர்சனின் எச்சரிக்கையை ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் எள்ளி நகையாடியுள்ளன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பாண்டிங் சிறந்த கேப்டன் இல்லை-தாம்சன்
மேற்கு ஆஸ்ட்ரேலியா அணியில் கெய்ல்
எதிரி முகாமில் புக்கானன் - பாண்டிங் ஏமாற்றம்
ஓய்வு பெற்றார் மைக்கேல் வான்
ஏன் கார்டிஃபில் முதல் டெஸ்ட்: ஆஸி. சந்தேகம்
ஆஸி. அணியில் இடம்பெற பிரட் லீ-யிற்கு தகுதி இல்லை-டேவிட்சன்