மிர்பூரில் நடைபெறும் இலங்கை-வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இரண்டாம் நாள் ஆட்டத்தில் வங்கதேசம் தன் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. முரளிதரன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முன்னதாக இலங்கை தன் முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு சுருண்டது.
வங்கதேச துவக்க வீரர்கள் தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸும் 44 ரன்கள் என்ற சுமாரான துவக்கத்தை அளித்தனர். ஆனால் முரளிதரன் பந்து வீச வந்தவுடன் 17 ரன்கள் எடுத்திருந்த தமீம் இக்பால் முரளி விக்கெட் அள்ளளை துவக்கி வைத்தார்.
அதன் பிறகு கெய்ஸ் (33) ஜுனைத் சித்திக் (29) அஷ்ரஃபுல் (12) ராகிபுல் ஹஸன் (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க வங்கதேசம் 117/5 என்று ஆனது. அதன் பிறகு மெஹ்ராப் குசைன் ஜூனியர் (29), ஷாகிப் அல் ஹஸன் (26) ஆகியோர் மட்டுமே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களும் ஆட்டமிழக்க வங்கதேசம் சரிந்தது.
இலங்கை அணியில் முரளிதரன் 5 விக்கெட்டுகளையும், சமிந்தா வாஸ் 2 விக்கெட்டுகளையும், பிரசாத் மற்றும் ஹெராத் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். |