கொழும்பு: இலங்கை அணி பாகிஸ்தானிற்கு கிரிக்கெட் பயணம் மேற்கொள்ள இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே அனுமதி அளித்துள்ளார்.
இலங்கை அணியை பாகிஸ்தான் அழைத்து அதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கிடையே அர்ஜுனா ரணதுங்கா தலைமை இடைக்காலக் குழு கலைக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் பயணம் குறித்த முடிவில் தாமதம் ஏற்பட்டது.
இலங்கை அதிபரின் இந்த முடிவை பாகிஸ்தான் க்ரிக்கெட் வாரிய இயக்குனர் ஜாவேத் மியாண்டட் வெகுவாக பாராட்டியதோடு, இந்த தொடரை நேரில் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவௌடன் வரவேண்டும் என்றார்.
மேலும் கிரிக்கெட் ஆட்டத்திற்கு பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பான நாடு என்பதை உலக நாடுகளுக்கு நிரூபிக்க வேண்டிய கடமை உள்ளது என்றும் ஜாவேத் மியாண்டட் தெரிவித்தார்.
இந்த தொடர் வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் பிபரவரி 25ஆம் தேதி வரை நடைபெறும்.
இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளையும் 5 ஒரு நாள் சர்வதேச போட்டிகளையும் விளையாடலாம் என்று தெரிகிறது. |