பெங்களூரில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் தமிழ் நாடு அணிக்கு எதிராக வங்காள அணி தன் முதல் இன்னிங்சில் 2ம் நாளான இன்று 8 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது.
வங்காள அணியின் மனோஜ் திவாரி அபாரமான முறையில் விளையாடி 131/4 என்று சரிய இருந்த வங்காள அணியை தனது 144 ரன்களால் நிலை நிறுத்தினார்.
சஹா 53 ரன்களையும், சக்ரபர்த்தி 57 ரன்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
தமிழ் நாடு அணியில் கணபதி 4 விக்கெட்டுகளையும் அஷ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த எல்.பாலாஜி 1 விக்கெட்டை வீழ்த்தினார். |