முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > 293 ரன்களுக்கு சுருண்டது இலங்கை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
293 ரன்களுக்கு சுருண்டது இலங்கை
வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெறும் இலங்கை-வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 2ஆம் நாள் ஆட்டத்தில் சற்று முன் 293 ரன்களுக்கு சுருண்டது.

வங்கதேசத்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷாகிப் அல் ஹஸன் அபாரமாக வீசி மீண்டும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இலங்கை அணியில் வான்டோர்ட் 44 ரன்களையும், சங்கக்காரா 43 ரன்களையும் சமிந்தா வாஸ் 37 ரன்களையும் எடுக்க திலன் சமரவீர 91 ரன்களை அதிகபட்சமாக எடுத்து ஆட்டமிழந்தார். சமரவீராவும், வாஸும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 99 ரன்களை சேர்த்தனர்.

தற்போது உணவு இடைவேளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு வங்கதேசம் களமிறங்கவுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஸ்டெய்ன் அபாரம்; ஆஸ்ட்ரேலியா 394 ஆல் அவுட்
மெல்பர்ன் டெஸ்ட்: ஆஸ்ட்ரேலியா-280/6
பாண்டிங் அதிரடி சதம் ஆஸி.210/4
தாமதமாக ஓவ‌ர் ‌வீ‌சிய இங்கிலாந்து அணிக்கு அபராதம்
ரணதுங்கா நீக்கம்! இடைக்கால நிர்வாகம் கலைப்பு!
டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2ஆம் இடம்