இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது தாமதமாக ஓவர் வீசியதற்காக இங்கிலாந்து அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி இலக்கான 387 ரன்களை விரட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர் வீசி முடிக்கவில்லை. அந்த அணி ஒரு ஓவர் தாமதமாக வீசியது.
இதையடுத்து, சர்வதே கிரிக்கெட் பேரவையின் (I.C.C.) நடத்தை விதிமுறைகள் படி இங்கிலாந்து அணியின் தலைவர் கெவின் பீட்டர்சனுக்கு 10 விழுக்காடும், சக வீரர்களுக்கு தலா 5 விழுக்காடும் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படுவதாக போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் அறிவித்துள்ளார். |