இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 1- 0 என்று வெற்றி பெற்றதால் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2ஆம் இடத்தை மீண்டும் பிடித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று முடிந்த மொஹாலி டெஸ்டை டிரா செய்ததால் 2 தரவரிசைப் புள்ளிகளை கூடுதலாக பெற்று 2ஆம் இடத்தை மீண்டும் பிடித்துள்ளது.
தற்போது ஆஸ்ட்ரேலியா 130 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 118 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 117 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் உள்ளது.
ஆனால் தென் ஆப்பிரிக்கா ஆஸ்ட்ரேலியாவில் தற்போது தொடரை 1- 1 என்று டிரா செய்தாலே மீண்டும் இரண்டாம் இடத்தை பிடித்து விடும். தென் ஆப்பிரிக்கா 3- 0 என்று வெற்றி பெற்றால் முதலிடத்தை பெறும் வாய்ப்பு உள்ளது.
மாறாக அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா தோல்வி தழுவி தொடரை இழந்தால் ஆஸ்ட்ரேலியாவிற்கும் தென் ஆப்பிரிக்காவிற்குமான புள்ளிகள் இடைவேளி மேலும் 15 புள்ளிகள் அதிகரிக்கும் என்பதோடு இரண்டாமிடத்திற்கும் வர முடியாது. |