முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > கெய்ல் சதம் வீண்! டெஸ்ட் டிரா!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கெய்ல் சதம் வீண்! டெஸ்ட் டிரா!
நேப்பியர் மைதானத்தில் நடைபெற்ற நியூஸீலாந்து, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 2-வது இறுதி டெஸ்ட் போட்டி எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்ததோடு தொடரும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

5ஆம் நாளான இன்று 278/7 என்று துவங்கிய மேற்கிந்திய அணி 375 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கிறிஸ் கெய்ல் 20 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 197 ரன்களை விளாசினார்.

இறுதியில் எட்வர்ட்ஸ், போவெல் முறையே 20, 22 ரன்களை எடுத்தனர். நியூஸீலாந்து அணியில் ஆஃப் ஸ்பின்னர் ஜீதன் படேல் 5 விக்கெட்டுகளையும், வெட்டோரி, ஃபிரான்க்ளின் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

312 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸீலாந்து அணி ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களையே எடுக்க முடிந்தது.

ஜேமி ஹவ் 54 ரன்களையும், ஃபிளின் 33 ரன்களையும், ராஸ் டெய்லர் 46 ரன்களையும், மெக்குல்லம் 19 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ரைடர் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கிந்திய அணியில் டெய்லர் 2 விக்கெட்டுகளையும் எட்வர்ட்ஸ், பென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இந்தியா 251/7 டிக்ளேர்
உணவு இடைவேளை: இந்தியா 216/4
ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் பயிற்சியாளராக நீல்சன் நீடிப்பு
யுவ்ராஜ் 50; இந்தியா 153/4
ஆட்டம் 11.30 மணிக்கு துவங்குகிறது
இ‌ந்‌தியா- ‌இ‌ங்‌கிலா‌ந்து ஆ‌ட்ட‌ம் தாமத‌ம்!