மொஹாலி டெஸ்ட் இறுதி நாள் ஆட்டம் தாமதமாகத் துவங்கியதால் உணவு இடைவேளைக்கு முன் 13 ஓவர்கள் ஆட்டமே சாத்தியமானது. இதில் இந்தியா 82 ரன்களை குவித்து 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்தமாக இந்தியா 367 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
யுவ்ராஜ் சிங் இன்று களமிறங்கியது முதல் அதிரடி ஆட்டம் ஆடினார். 40 பந்துகளில் இவர் மேலும் 40 ரன்களை குவித்துள்ளார். ஸ்டூவர்ட் பிராடின் பந்தை மீண்டும் அடுத்தடுத்து இரண்டு மிகப்பெரிய சிக்சர்களுக்கு அடித்தார் யுவ்ராஜ்.
ஒன்று மிட் ஆன் திசையில் டென்னிஸ் ஷாட் போல் ஆடப்பட்டது. மற்றொன்று கவர் சிசையில் சிக்சருக்கு அடிக்கப்பட்டது.
கம்பீரும் அடித்து ஆடினார். இவர் தற்போது 80 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
இன்னிங்ஸை முடித்துக் கொள்வதற்கான அறிவிப்பு இன்னமும் வரவில்லை. இன்றைய தினம் இன்னமும் 54 ஓவர்களே மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. |