முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > இந்தியா 285 ரன்கள் முன்னிலை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்தியா 285 ரன்கள் முன்னிலை
மொஹாலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது இரண்டாவ்து இன்னிங்சில் 4ஆம் நாள் ஆட்ட இறுதியில் 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து மொத்தம் 285 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 12 ஓவர்கள் வீசப்பட வேண்டிய நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடிக்கபட்டுள்ளது.

தேனீர் இடைவேளைக்குப் பிறகு 56/3 என்று துவங்கிய இந்திய அணி வீரர்கள் லக்ஷ்மணும், கம்பீரும் 4-வது விக்கெட்டுக்காக 36 ரன்களைச் சேர்க்க 19 ஓவர்கள் எடுத்துக் கொண்டனர்.

15 ரன்கள் எடுத்திருந்த லக்ஷ்மண் ஓடவேண்டிய ரன்னை மெதுவாக துவங்கி ஓடியதால் விக்கெட் கீப்பர் முனையில் ரன் அவுட் ஆனார். இவர் ரன் அவுட்டிற்கு இவரது மந்தமான ஓட்டமே காரணம்.

80/4 என்ற நிலையில் யுவ்ராஜ் களமிறங்கி அதிரடி முறையில் விளையாடி வருகிறார். 40 பந்துகளை சந்தித்த இவர் 5 பவுண்டரிகள் ஒரு மிகப்பெரிய சிக்சருடன் 39 ரன்களை எடுத்துள்ளார்.

கம்பீர் அளவுக்கு மீறிய எச்சரிக்கையுடன் விளையாடி 155 பந்துகளில் 44 ரன்கள் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட் முறையே ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

னாளை மேலும் 50 ரன்களைக் குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்ய முடிவெடுக்கலாம். இங்கிலாந்து அணி ஒரு 70 ஓவர்கள் ஆட்டத்தில் 335 அல்லது 3490 ரன்களை துரத்த நேரிடலாம். பனிமூட்டம், தாமதத் துவக்கம், மாலையில் வெளிச்சமின்மை ஆகிய காரணிகளால் ஆட்டம் தற்போதைய சூழ் நிலையில் டிராவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து மிக மோசமாக விளையாடினால் மட்டுமே தோல்வி அடைய வாய்ப்பிருக்கிறது. ஆட்டக் களத்தில் பந்துகள் தாழ்வாக செல்கின்றன. லெக்ஸ்பின்னருக்கு பந்துகள் பிட்ச் ஆகும் இடத்தில் சற்றே பந்துகள் அபாயகரமாக எழும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
தென் ஆப்பிரிக்க ஒரு நாள் கிரிக்கெட் அணியில் கிப்ஸ்
கெய்ல் அதிரடி சதம்! மே.இ.தீவுகள் 278/7
தேனீர் இடைவேளை: இந்தியா 56/3
இந்தியா 151 ரன்கள் முன்னிலை
பிரையர், பிராட் அவுட்;இங்கிலாந்து 290/8
பீட்டர்சன், பிளிண்டாஃப் அவுட்: இங்கிலாந்து-282/6