முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > இந்தியா ப்ளூ அணி 235/9!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்தியா ப்ளூ அணி 235/9!
சாலஞ்சர் தொடர் உள் நாட்டு ஒரு நாள் கிரிக்கெட்டில் பத்ரி நாத் தலைமை இந்தியா ரெட் அணிக்கு எதிராக யுவ்ராஜ் சிங் தலைமை இந்தியா ப்ளூ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்துள்ளது.

பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இதில் யுவ்ராஜ் சிங் தலைமை இந்தியா ப்ளூ அணி பூவா தலையா வென்று முதலில் பேட் செய்தது.

ராபின் உத்தப்பா சிறப்பக விளையாடி 106 பந்துகளில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அணித் தலைவர் யுவ்ராஜ் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கடைசியில் இர்ஃபான் பத்தான் 44 பந்துகளில் 43 ரன்களை விளாசினார்.

இந்திய ரெட் தரப்பில் பிரவீண் குமார் சிக்கனமாக வீசி 10 ஓவர்களில் வெறும் 34 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். எம்.பி. பார்மர் என்ற சுழற்பந்து வீச்சாளர் 10 ஓவர்களில் 36 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். தமிழக வீரர் எல்.பாலாஜி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரோஹித் ஷர்மா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இடைவேளைக்குப் பிறகு பத்ரி நாத் தலைமை இந்தியா ரெட் அணி களமிறங்குகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
சலீம் மாலிக் ஆயுள் தடை நீக்கம்!
ரிவர்ஸ் ஸ்விங்!ஆஸி. வீரர்கள் ஆச்சரியம்!
சாலஞ்சர் ஒரு நாள் கிரிக்கெட் இன்று முதல்!
இரட்டைநிலை ஏன்: ஐ.சி.சி. மீது கவாஸ்கர் சாடல்!
எனது சாதனை முறியடிக்க சச்சின் பொருத்தமானவர்: லாரா!
டெஸ்ட் தரவரிசை: 19வது இடத்தில் சச்சின்!