இந்திய ஒரு நாள் அணியைத் தேர்வு செய்வதற்கான என்.கே.பி. சால்வே சால்ஞ்சர் தொடர் ஒரு நாள் போட்டிகள் இன்று கட்டாக்கில் துவங்குகிறது.
முதல் போட்டியில் இன்று யுவ்ராஜ் சிங் தலைமையிலான இந்தியா ப்ளூ அணி பத்ரிநாத் தலைமையிலான இந்தியா ரெட் அணியை எதிர்கொள்கிறது.
இதில் விளையாடும் மற்றொரு அணி இந்தியா கிரீன். இதன் அணித் தலைவர் மொகமத் கயீஃப்.
இந்தியா ப்ளூ அணி: யுவ்ராஜ்சிங், ரஹானே, உத்தப்பா, விரத் கோலி, தினேஷ் கார்த்திக், ரவிந்தர் சிங், இர்ஃபான் பத்தான், யோகேஷ் தகாவாலே, அஷோக் டிண்டா, பிரதீப் சங்வான், சி.நந்தா, அர்ஜுன் யாதவ், சித்தார்த் திரிவிஏதி, ஆர்.அஷ்வின்.
இந்தியா ரெட் அணி : பத்ரிநாத், எம்.விஜய், ஃபாஸல், மனோஜ் திவாரி, ரோஹித் ஷர்மா, ஜய்தேவ் ஷா, அபிஷேக் நாயர், விருத்திமான் சாஹா, பிரவீண் குமார், எல்.பாலாஜி, சாவ்லா, வினய் குமார், மோனிஷ் பர்மார், பார்த்தீவ் படேல்.
இந்தியா கிரீன் அணி: மொகமது கெய்ஃப், ஷிகார் தவான், நமான் ஓஜா(வி.கீ.), சுரேஷ் ரெய்னா, செடேச்வர் புஜாரா, சவ்ரவ் திவாரி, யூஸுஃப் பத்தான், எல்.ஆர்.ஷுக்லா, மன்ப்ரீத் கோனி, ஆர்.பி.சிங், பிராக்யன் ஓஜா, ரஜத் பாட்டியா, அபினவ் குமார், பங்கஜ் சிங்.
அனைத்துப் போட்டிகளும் பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.
போட்டி விவரம்:
அக்.23: இந்தியா ப்ளூ/இந்தியா ரெட். அக்.24. இந்தியா கிரீன்/ இந்தியா ரெட். அக்.25. இந்தியா ப்ளூ/ இந்தியா கிரீன். அக்.26: இறுதிப் போட்டி. |