டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் பேட்ஸ்மென்கள் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் 20வது இடத்திற்குள் முன்னேறியுள்ளார். மொஹாலி டெஸ்ட் போட்டிக்கு முன்னர் தரவரிசைப் பட்டியலில் 24வது இடத்தில் இருந்த சச்சின், மொஹாலி போட்டியின் முதல் இன்னிங்சில் 88 ரன்களும், 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 10 ரன்களும் எடுத்தார். இதன் காரணமாக டெஸ்ட் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் 19வது இடத்திற்கு அவர் முன்னேறியுள்ளார்.இப்போட்டியின் போது டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் (11,953 ரன்கள்) குவித்த லாராவின் சாதனையை முறியடித்ததுடன், டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக 12 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் சச்சின் படைத்தார். 29 வது இடத்தில் கம்பீர்: ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான மொஹாலி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 67 ரன்களும், 2வது இன்னிங்சில் 104 ரன்களும் குவித்ததன் மூலம் இந்திய அணியின் துவக்க வீரர் கௌதம் கம்பீர் 29வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பு அவர் 37வது இடத்தில் இருந்தார்.இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 92 ரன்களும், 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 69 ரன்களும் குவித்ததன் மூலம் அணித்தலைவர் தோனி 37வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். |
தேடல் தொடர்பான தகவல்கள் |