முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > திராவிட், கும்ளே-க்கு உலக கிரிக்கெட் கமிட்டி உறுப்பினர் அந்தஸ்து!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
திராவிட், கும்ளே-க்கு உலக கிரிக்கெட் கமிட்டி உறுப்பினர் அந்தஸ்து!
இந்தியாவின் ராகுல் திராவிட், அனில் கும்ளே மற்றும் தென்ஆப்ரிக்காவின் ஷான் போலக் ஆகியோருக்கு லண்டன் மெரிலிபோன் உலக கிரிக்கெட் கமிட்டியின் வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.

PTI PhotoFILE
கிரிக்கெட் தொடர்பான தற்போதைய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இந்த வாரத்தின் இறுதியில் எம்.சி.சி. (மெரிலிபோன் கிரிக்கெட் கிளப்) உலக கிரிக்கெட் கமிட்டி டெல்லியில் கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருபது-20 போட்டியின் தாக்கம், களநடுவரின் தீர்ப்பை தொழில்நுட்ப பரிசீலனைக்கு உட்படுத்துவது (ரிவ்யூ/ரெஃபரல் சிஸ்டம்) மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கின் வெற்றி மற்றும் எதிர்காலம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

PTI PhotoFILE
இதில் இந்திய-இலங்கை டெஸ்ட் தொடரில் அறிமுகம் செய்யப்பட்ட ரெஃபரல் சிஸ்டம் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர்களான திராவிட், கும்ளே ஆகியோர் தங்களது கருத்துகளை தெரிவிக்க உள்ளனர்.

மேலும், கூட்டத்தின் முடிவில் திராவிட், கும்ளே, ஷான் போலக் ஆகிய அனுபவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக, அவர்களுக்கு மெரிலிபோன் உலக கிரிக்கெட் கமிட்டியின் வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
முதல் டெஸ்ட்: பங்களாதேஷை வீழ்த்தியது நியூஸீ.
ஐ.சி.சி. நடத்தை விதிகளை மீறிய ஜாகீர்கானுக்கு அபராதம்!
இ‌ந்‌திய ‌வீ‌ர‌‌ர்க‌ள் ந‌ன்றாக ‌விளையாடினா‌ர்க‌ள்: பா‌ண்டி‌ங்!
2வது டெ‌ஸ்‌டி‌ல் இ‌ந்‌தியா அபார வெ‌ற்‌றி: 320 ர‌ன் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் ஆ‌‌ஸி.யை ‌வீ‌‌ழ்‌த்‌தியது!
வெ‌ற்‌றி‌யி‌ன் ‌‌வி‌ளி‌ம்‌பி‌ல் இ‌ந்‌தியா: ஆ‌ஸ்‌ட்ரே‌லியா 168/8
3, 4வது டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றமில்லை!