முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > பாண்டிங் அபாரம்! ஆஸி.254/4!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பாண்டிங் அபாரம்! ஆஸி.254/4!
பெங்களூரில் நடைபெறும் முதல் டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் இந்திய மண்ணில் தன் முதல் சதத்தை எடுத்தார். ஆட்ட நேர இறுதியில் ஆஸ்ட்ரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்துள்ளது.

தேநீர் இடைவேளையின் போது 94 ரன்களில் இருந்த பாண்டிங், கும்ளேயின் ஓவரில் மிட் ஆஃபில் அபாரமான 4 ஒன்றை அடித்து 99 ரன்களை எட்டினார். அதன் பிறகு பாயிண்ட் திசையில் தட்டி விட்டு 3 ரன்களை எடுத்து தனது 36வது டெஸ்ட் சதத்தை எடுத்தார்.

இந்தியாவில் தன் முதல் சதத்தை எடுத்து தனது திறமையை இன்று உலகிற்கு நிர்யூபித்தார் பாண்டிங். ஆனாலும் ஒரு மிகப்பெரிய இன்னிங்சிற்கு தயாராகிக் கொண்டிருந்த அவர் கும்ளேயின் தேநீர் இடைவேளைக்குப் பிறகான பந்து வீச்சு சற்றே சந்தேகமாக ஆடுமாறு செய்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஹர்பஜன் பாண்டிங்கை மீண்டும் வீழ்த்தினார். 243 பந்துகளை சந்தித்த பாண்டிங் 13 பவுண்டரிகளுடன் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அவருக்கு பிறகு களமிறங்கிய மைக்கேல் கிளார்க் சில கடினமான பந்துகளை சந்திக்க நேரிட்டது. ஆட்டத்தின் கடைசியில் ஜாகீர் கானின் அபார பந்து வீச்சிற்கு 11 ரன்களில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

மைக் ஹஸ்ஸிக்கு இன்று அதிர்ஷ்டமான நாள் என்றே கூறவேண்டும். கும்ளே பந்தில் நேராக கால்காப்பில் வாங்கி தப்பித்தார். அதன் பிறகு மீண்டும் கும்ளே பந்தில் தோனி கேட்ச் ஒன்றை கோட்டை விட்டார். தொடர்ந்து கவுதம் கம்பீரும் கும்ளேயின் பந்தில் ஹஸ்ஸிக்கு கேட்சை கோட்டை விட்டார். அவர் 46 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

இந்திய அணியில் ஜாகீர் கான் 17.2 ஓவர்களில் 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இஷாந்த் ஷர்மா, ஹர்பஜன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறும். ஷேன் வாட்சன், ஹஸ்ஸியுடன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
தப்பித்தார் பாண்டிங்!
தேநீர்: ஆஸ்ட்ரேலியா 166/2
ஜேகப் ஓரம் அபாரம்!நியூஸீ.201/9!
உணவு இடைவேளை: ஆஸி.75/1
இரானி கோப்பை நீக்கம் முடிவை துரிதப்படுத்தியது-கங்கூலி!
வங்கதேசத்திடம் நியூஸீ. சரிவு!