முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > தேநீர்: ஆஸ்ட்ரேலியா 166/2
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தேநீர்: ஆஸ்ட்ரேலியா 166/2
பெங்களூர் டெஸ்டில் ஆஸ்ட்ரேலியா தன் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள எடுத்துள்ளது. சைமன் கேடிச் 66 ரன்களுக்கு இஷாந்திடம் ஆட்டமிழந்தார். பாண்டிங் 94 ரன்களுடன் அபாரமாக ஆடிவருகிறார். இவருடன் மைக் ஹஸ்ஸி விளையாடுகிறார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு பாண்டிங்கும், கேடிச்சும் நிதானப் போக்கை தொடர்ந்தனர். பாண்டிங் மட்டும் ஹர்பஜனின் இரண்டு பந்துகளை தூக்கி மிட் விக்கெட்டிற்கு மேல் அடித்தடு தவிர, பாண்டிங் ரிஸ்க் எதையும் எடுக்கவில்லை. அவர் 182 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

ஆட்டத்தின் 35ஆவது ஓவரில் கும்ளேயின் பந்து கேடிச்சின் கால்காப்பை ஸ்டம்பிற்கு நேராக தாக்கியது. ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை. இஷாந்த் ஷர்மாவின் ஒரு பந்து பாண்டிங் மட்டையின் உள் விளிம்பில் பட்டு லெக் ஸ்டம்பை உரசிக் கொண்டு பவுண்டரி சென்றது. இந்த இரண்டு தவிர ஆஸ்ட்ரேலியாவிற்கு பெரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

கேடிச்சும் பாண்டிங்கும் இரண்டாவது விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்தனர். தேனீர் இடைவேளைக்கு சற்று முன் 66 ரன்கள் எடுத்திருந்த கேடிச், இஷாந்த் ஷர்மாவின் வெளியே சென்ற பந்தை மட்டையால் தொட முயன்று தோனியிடம் கேட்ச் கொடுத்தார். இஷாந்த் ஷர்மாவின் கடுமையான முயற்சிக்கு இறுதியில் வெற்றி கிடைத்துள்ளது.

மைக் ஹஸ்ஸி ரன் எதுவும் எடுக்காமல் ஆடி வருகிறார். ஹர்பஜனும், கும்ளேயும், நிறைய பந்துகளை பாண்டிங்கின் இடது கால்காப்பிற்கு வீசியதால் பாண்டிங் சுலபமாக சில சிங்கிள்களை எடுக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஜேகப் ஓரம் அபாரம்!நியூஸீ.201/9!
உணவு இடைவேளை: ஆஸி.75/1
இரானி கோப்பை நீக்கம் முடிவை துரிதப்படுத்தியது-கங்கூலி!
வங்கதேசத்திடம் நியூஸீ. சரிவு!
ஹெய்டன் ஆட்டமிழந்தார் ஆஸி.10/1
இந்தியா- ஆஸி. முதல் டெஸ்ட்: வியாழனன்று தொடக்கம்!