முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > ஜேகப் ஓரம் அபாரம்!நியூஸீ.201/9!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஜேகப் ஓரம் அபாரம்!நியூஸீ.201/9!
மிர்பூரில் வங்கதேச, நியூஸீலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் முதல் ஒரு நாள் போட்டியில் நியூஸீலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சுமாரான 201 ரன்களை எட்டியுள்ளது. ஜேகப் ஓரம் தன் அரை ச்தம் மூலம் சரிய இருந்த அணியை நிலை நிறுத்தினார்.

மோர்டசா, ரசாக் ஆகியோரின் பந்து வீச்சில் 79/6 என்று சரிய இருந்த நியூஸீலாந்து அணியை அதன் பிறகு கேப்டன் டேனியல் வெட்டோரி (30) ஜேகப் ஓரம் (57) ஆகியோர் இணைந்து 20 ஓவர்களில் 70 ரன்களை சேர்த்து சற்றே உயர்த்தினர்.

இறுதியில் மில்ஸ் (16). சவ்தீ (19) ஆகியோர் அடித்து ஆடி ரன் எண்ணிக்கையை சுமாரான 201 ரன்களுக்கு உயர்த்தியுள்ளனர்.

வங்கதேச அணியில் சையத் ராஸெல் தவிர மற்றவர்கள் அனைவரும் சிக்கனமாக வீசினர். மோர்டசா 4 விக்கெட்டுகள், ரசாக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வங்கதேச அணிக்கு வெற்றி பெற அருமையான வாய்ப்பு. உணவு இடைவேளைக்கு பிறகு வங்கதேசம் களமிறங்கும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
உணவு இடைவேளை: ஆஸி.75/1
இரானி கோப்பை நீக்கம் முடிவை துரிதப்படுத்தியது-கங்கூலி!
வங்கதேசத்திடம் நியூஸீ. சரிவு!
ஹெய்டன் ஆட்டமிழந்தார் ஆஸி.10/1
இந்தியா- ஆஸி. முதல் டெஸ்ட்: வியாழனன்று தொடக்கம்!
உரிய நேரத்தில் ஓய்வு பெறுவேன்: கும்ளே