டாக்கா: மிர்பூரில் நடைபெறும் முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணி வீச்சாளர் மோர்டசாவிடம் நியூஸீலாந்து அணி சரிந்தது. 25 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
பூவா தலையா வென்ற வங்கதேசம் முதலில் நியூஸீலாந்து அணியை விளையாட அழைத்தது. துவக்க 8 ஓவர்களில் நியூஸி. வீரர்கள் ரைடரும், மெக்குல்லமும் அதிரடி முறையில் 47 ரன்களை குவித்தனர். முதலில் மெக்குலம் 14 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக ரைடர்(34) வெளியேறினார். இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் மோர்டசா வீழ்த்தினார்.
அதன் பிறகு ஜேமி ஹவ்(7), டெய்லர் (2), ஸ்டைரிஸ் (4) ஃபிளின் (6) ஆகிய பேட்ஸ்மென்கள் ஆட்டமிழக்க நியூசீலாந்து அணி சரிவு கண்டது. தற்போது ஓரம் 14 ரன்களுடனும் அணித்தலைவர் வெட்டோரி 4 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
மோர்டசா 3 விக்கெட்டுகளையும், அப்துர் ரசாக் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். |