பெங்களுரில் இன்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், பூவாதலையா வென்ற ஆஸ்ட்ரேலிய அணி முதலில் பேட் செய்கிறது. மேத்யூ ஹெய்டன் ஜாகீர் கான் வீசிய முதல் ஓவரில் 3-வது பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
தற்போது ரிக்கி பாண்டிங் 6 ரன்களுடனும் கேடிச் 2 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
ஹெய்டன் ஜாகீர்கான் வீசிய முழு அளவிலான பந்தை ஆட முற்பட்டபோது பந்து மட்டையின் விளிம்பில் பட்டு தோனியிடம் தாழ்வாக சென்றது. அவர் அதனை பிடித்து விட்டார்.
ஆஸ்ட்ரேலியா அணி: ஹெய்டன், கேடிச், பாண்டிங், ஹஸ்ஸி, கிளார்க், ஒயிட், வாட்சன், ஹேடின், லீ, ஜான்சன், கிளார்க்.
இந்திய அணி: கம்பீர், சேவாக், திராவிட், டெண்டுல்கர், கங்கூலி, லக்ஷ்மண், தோனி, கும்ளே, ஹர்பஜன், ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மா. |