முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > கேட்ச்கள் ஒப்பந்தம் வேண்டாம்-சேவாக்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கேட்ச்கள் ஒப்பந்தம் வேண்டாம்-சேவாக்!
ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங், இந்திய அணித்தலைவருடன் மீண்டும் கேட்ச்கள் பற்றிய புரிந்துணர்வை மேற்கொள்ளலாம் என்ற முன்மொழிந்துள்ளதையடுத்து இந்திய அதிரடி வீரர் விரேந்திர சேவாக் அம்மாதிரியான ஒப்பந்தங்களுக்கு அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரேலிய வீரர்கள் ஒப்பந்தத்தை மீறும் விதமாக தரையில் பட்டு வந்த பந்தையெல்லாம் கேட்ச் என்று அழுகுணி ஆட்டம் ஆடியதை சேவாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

"சிட்னி டெஸ்டை நாம் வென்றிருப்போம், ஆனால் வெல்ல முடியாமல் போனதற்கு காரணம் தரையில் பட்டு வந்த பந்துகளை அவர்கள் கேட்ச் என்று சாதித்தனர்" என்றார்.

பாண்டிங் கூறியது என்னவெனில், சந்தேகத்திற்கிடமான கேட்ச்களில் ஃபீல்டர்கள் சொல்வதை ஏற்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

ஆனால் சேவாக், அவர்கள் கிரிக்கெட் உணர்வுக்கு எதிராக தரையில் பட்டு வந்த பந்தை கேட்ச் என்று சாதிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஹர்பஜன் கருத்திற்கு ஹெய்டன் பதில்!
மார்க் ராம்பிரகாஷிற்கு தடை!
இந்தியா "ஏ" தோல்வி! தொடர் டிரா!
சி.ஏ.பி.: டால்மியா-முகர்ஜீ மோதல்!
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களுக்கு விசா வழங்கப்படவில்லை
வார்னேவின் சிறந்த வீரர் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம்!